கண்களின் கருவளையம் என்பது பலருக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும் நிலையில் இதற்கு ஏராளமான மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் அது நிரந்தரமாக தீர்வு கொடுக்கவில்லை என்ற நிலையில் கருவளையம் ஏற்பட என்ன காரணம்? அதை போக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து தற்போது பார்ப்போம்
கருவளையம் ஏற்பட சில காரணங்கள் இதோ:
* போதுமான தூக்கமின்மை
* தவறான உணவுப் பழக்கம்
* ஒழுங்கற்ற வழக்கம்
* இரவில் தாமதமாக திரைகளைப் பார்ப்பது
* சோர்வு
* மன அழுத்தம்
* உலர் கண்கள்
* கண் ஒவ்வாமை
* நீரிழப்பு
* உடலில் நீர் பற்றாக்குறை
கண்களில் ஏற்படும் கருவளையங்களை நீக்க ரோஸ் வாட்டர் பெரிதும் உதவுகிறது. ரோஸ் வாட்டர் மற்றும் பால் ஆகியவற்றை சம அளவு எடுத்து பருத்தி பஞ்சின் உதவியுடன் கருவளையங்கள் உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் கழித்து தண்ணீரில் முகத்தை கழுவினால் விரைவில் கருவளையம் மறைந்துவிடும்.
அதேபோல் தேன், பால் மற்றும் எலுமிச்சை ஆகியவை கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களில் தடவினாலும் விரைவில் கருவளையம் நீங்கிவிடும்.