காலை வெகுநேரம் உணவு கிடைக்காத சமயத்தில், அதற்குத் தற்காலிக தீர்வாக பிஸ்கெட் சாப்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அது தினசரி பழக்கமாக மாறிவிடக் கூடாது.
பிஸ்கெட்டுகளில் உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துகள் கிடைப்பதில்லை. பெரும்பாலான பிஸ்கெட்டுகளில் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருக்கும். மேலும், உடலுக்கு தீங்களிக்கும் கொழுப்பு சேர்க்கப்பட்டிருக்கும்.
மேலும், பிஸ்கெட்டுகளில் "ட்ரான்ஸ் ஃபேட்" எனப்படும் மாறுபட்ட கொழுப்பு நிறைந்திருக்கும். இது தீய கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகரித்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்கும்.
அழகாகவும் ருசியாகவும் இருக்கும் பிஸ்கெட்டுகளை மறுக்க மனம் சம்மதிக்குமா? உலகம் முழுவதும் மக்கள் விரும்பும் பிஸ்கெட்டை அவ்வப்போது சாப்பிடலாம். ஆனால், அதையே தினசரி உணவாகப் பயன்படுத்த வேண்டாம். இரவு நேரங்களில் பசித்தாலும், ரத்த சர்க்கரை குறைந்தாலும், பயணங்களில் உணவு கிடைக்காத சூழலில் இருந்தாலும், பிஸ்கெட் ஒரு விரைவான தீர்வாக அமையும். ஆனால், அதை ஒரு வழக்கமாக மாற்றாமல், அவ்வப்போது மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்.