சாதாரண சளிக்கு வைரஸ்களே காரணம் என்றாலும், மழையின் குளிர்ச்சியால் உடல் வெப்பநிலை குறைந்து, நோய் எதிர்ப்புச் சக்தி பலவீனமடையும்போது வைரஸ் தாக்குதல் எளிதாகிறது என்று அறிவியல் கூறுகிறது.
சளி பிடிக்காமல் இருக்கப் பின்பற்ற வேண்டிய எளிய வழிகள்:
மழையில் சிக்கிக்கொண்டால், ஈரத்தை உறிஞ்சும் பருத்தி ஆடைகளை தவிர்த்து, விரைவாக காயக்கூடிய செயற்கை இழைகள் கொண்ட ஆடைகளை அணியுங்கள். இது உடல் வெப்ப இழப்பை கட்டுப்படுத்தும்.
மெதுவாக நடப்பதைவிட, லேசாக ஓடுவதன் மூலம் அல்லது வேகமாக நடப்பதன் மூலம் தசைகள் உள் வெப்பத்தை உற்பத்தி செய்து, குளிர்ச்சியை எதிர்த்து போராட உதவுகின்றன.
வீடு திரும்பியவுடன் உடனடியாக ஈரமான உடைகள், குறிப்பாக சாக்ஸ், காலணிகளை நீக்கிவிடுங்கள். தலை மற்றும் கால்களை நன்றாகத் துடைக்கவும்.
உடலின் உள் வெப்பநிலையை சீராக்க, சுக்கு காபி அல்லது மிளகு ரசம் போன்ற சூடான பானம்/உணவை உடனடியாக உட்கொள்ளுங்கள்.
மழையில் நனைவது பற்றி கவலைப்படாமல், உடல் வெப்பநிலை குறையாமல் பாதுகாப்பதே சளி பிடிக்காமல் இருப்பதற்கான அடிப்படை விதியாகும்.