HMPV தொற்று கலந்து சில நாட்களாக பரவி வரும் நிலையில் இந்த தொற்றால் கர்ப்பிணிகளின் கர்ப்பத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் தாயும் ஆரோக்கியம் மற்றும் கருவின் வளர்ச்சி ஆகிய இரண்டையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் கவனிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஐந்து வயது குழந்தை முதல் 65 வயது முதியவர்கள் வரை HMPV தொற்று யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு இந்த நோய் அதிகம் வர வாய்ப்புள்ளது.
கர்ப்பிணி பெண்களுக்கு இந்த நோய் வந்தால் குழந்தையை பாதிக்குமா என்ற சந்தேகமும் இருந்து வருகிறது. கர்ப்பிணி பெண்கள் எப்போதும் சுவாசப் பிரச்சனையை சந்திக்கும் அபாயம் அதிகம் இருப்பதால் கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனம் அடைகிறது. இருப்பினும் கர்ப்பிணிகளின் கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு HMPV வைரஸ் நோயால் பாதிப்பு என்பது குறித்த எந்த ஆதாரமும் இல்லை.
ஆனால் அதே நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஒருவேளை கர்ப்பிணி பெண்களுக்கு HMPV வைரஸ் பாதிக்கப்பட்டால் குழந்தையின் எடை குறைவாக இருக்கலாம் அல்லது உயரம் மற்ற குறைந்த விலையில் குறைவாக இருக்கலாம் என்றும் இந்த நோய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.