சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்த தானம் செய்யலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும் நிலையில் இது குறித்து தற்போது பார்ப்போம்.
சர்க்கரை நோயாளிகள் ரத்ததானம் போன்ற செயலை தாராளமாக செய்யலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் சில குறிப்புகளை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தாலோ அல்லது சிறுநீரக பாதிப்பு மற்றும் இருதய பாதிப்பு இருந்தாலும் அவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது. மேலும் சர்க்கரை பாதிப்புக்கு இன்சுலின் செலுத்தி கொள்பவர்கள் உடல் எடை 45 கிலோவுக்கும் குறைவானவர்கள் ரத்ததானம் செய்ய வேண்டாம்.
அதேபோல் ஹீமோகுளோபின் 12.5 கிராமுக்கு குறைவாக இருப்பவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மலேரியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர்களும் ரத்த தானம் செய்ய வேண்டாம் என மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.