பெருஞ்சீரகத்தை உணவுடன் சேர்த்துக் கொண்டால் உடல் குளிர்ச்சி அடையும் என்றும் வயிற்று உபாதைகள் மற்றும் வாய் தொல்லைகள் தீரும் என்றும் கூறப்படுகிறது.
கோடை காலத்தில் உடல் அதிக வெப்பமடைவதை அடுத்து அதை குளிர்விக்க பெருஞ்சீரகம் மிகவும் பயன்படும் என்று கூறப்படுகிறது. சாப்பிட்ட பிறகு சிறிதளவு பெருஞ்சீரகத்தை மெல்வதால் வாய்க்கு புத்துணர்ச்சி கொடுப்பது மட்டுமின்றி வாயு தொல்லை மற்றும் வயிறு சார்ந்த உடல் உபாதைகளும் நீங்கும் என்று கூறப்படுகிறது
கோடை காலத்தில் பாலுடன் பெருஞ்சீரகத்தை சேர்த்து குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது என்றும் பெருஞ்சீரகத்தை நீரில் காய்ச்சி குடித்தால் இரைப்பை சம்பந்தமான பிரச்சனை தீரும் என்றும் பெருஞ்சீரகம் நீர் மற்றும் தேன் கலந்து குடித்தால் மிகவும் உடலுக்கு நல்லது என்றும் கூறப்படுகிறது.