Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிக்கன்.. மட்டன்.. என்னென்ன சத்துக்கள்?.. என்ன வித்தியாசம்?. வாங்க பார்ப்போம்..

Advertiesment
goat
இந்தியாவை பொருத்தவரை அசைவம் என்றால் பலருக்கும் சிக்கன் என சொல்லப்படும் கோழி இறைச்சி மற்றும் மட்டன் என அழைக்கப்படும் ஆட்டு இறைச்சியை சாப்பிடும் பழக்கம் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் கோழி மற்றும் ஆட்டு இறைச்சிகளை மக்கள் அதிகமாக உண்கிறார்கள். அதேநேரம் சிக்கனை விட மட்டன் மூன்று மடங்கு விலை அதிகம். ஆனாலும் பலருக்கும் மட்டன் என அழைக்கப்படும் ஆட்டு இறைச்சி பிடித்த இறைச்சியாக இருக்கிறது..

இந்நிலையில், இந்த இரண்டு இறைச்சியிலும் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது? என்ன வித்தியாசம் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்:

சிக்கனை குறைந்த அளவு கொழுப்பு (Fat) உள்ளது. ஆனால் மட்டனில் கொழுப்பு அதிகம்.

சமைக்கும்போது சிக்கன் விரைவாக வெந்துவிடும். எனவே வேகமாக சமைக்க முடியும்.. ஆனால் ஆட்டிறைச்சி வேகுவதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும்..

சிக்கன் மென்மையான சுவை கொண்டது.. மட்டன் வலுவான மற்றும் தனித்துவமான சுவையை கொண்டது..

சிக்கனில் குறைவான கலோரிகள் (Calories) இருக்கிறது.. ஆனால் மட்டனில் அதிக கலோரிகள் உண்டு.

சிக்கன் வெண்மையான இறைச்சி.. மட்டன் சிவப்பு இறைச்சி (Red Meat)

சிக்கனில் புரதச்சத்து (Protein) அதிகமாக இருக்கிறது.. மேலும் கொழுப்பு குறைவு (Low Fat)..  ஆனால் மட்டனில் இரும்பு சத்தும் (Iron), துத்தநாக சத்தும் அதிகமாக (Zinc) இருக்கிறது.
அதேநேரம் கொழுப்புச்சத்து அதிகம்.

சிக்கனை பொறுத்தவரை தினமும் கூட சாப்பிடலாம். ஆனால், மட்டனில் அதிக அளவு கொழுப்பு சத்து இருப்பதால் அதை அளவாக எடுத்துக் கொள்வது நல்லது என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.. அதேபோல், சிக்கனோ, மட்டனோ இரவு நேரங்களில் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். ஏனெனில், சாப்பிட்டவுடன் தூங்க சென்றால் இறைச்சியை ஜீரணிப்பதற்கு ஜீரண உறுப்புகள் சிரமப்படும். அதனால்தான் பல நாடுகளில் இறைச்சிகளை அரைத்து கூல் போல் ஆக்கி சமையலில் பயன்படுத்த துவங்கவிட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பற்களை பாதுகாக்க சில டிப்ஸ்!. இத மட்டும் செஞ்சி பாருங்க!..