Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது நல்லதா?!.. வாங்க பார்ப்போம்...

Advertiesment
tender
உலகமெங்கும் உள்ள மக்கள் இளநீரை விரும்பி குடிக்கிறார்கள். வருடத்தின் எல்லா நாட்களும் இளநீர் மக்களுக்கு கிடைக்கிறது. ஏனெனில் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் அதிக அளவு தென்னை மரங்கள் பயிரிடப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில் இளநீர் தயாராகி மக்களுக்காக விற்பனைக்கு வந்து விடுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை இளநீரின் உருவத்தை பொறுத்து ஒரு இளநீரின் விலை 30 முதல் 70 ரூபாய் வரை கூட விற்கிறார்கள். சில இடங்களில் 100 ரூபாய்க்கு கூட இளநீர் விற்கப்படுகிறது. அதுவும் கோடை காலம் வந்து விட்டால் இளநீரின் விலை அதிகரித்து விடுகிறது..

பெரும்பாலானவர்கள் இளநீரை காலையில்தான் அருந்துகிறார்கள். ஒருபக்கம், இரவில் இளநீர் குடிக்கலாமா என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. உண்மையில் இரவில் உறங்குவதற்கு முன்பு இளநீர் கொடுப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். குறிப்பாக பருவ கால நோய் தொற்றுகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள அது உதவும்..

இளநீரில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு போன்ற பண்புகள் இருக்கிறது. மேலும் நிறைய வைட்டமின்களும், தாதுக்களும் இளநீரில் அடங்கியிருக்கிறது. இளநீர் அருந்துவதால் கூந்தல் மற்றும் சருமத்திற்கும் அது வழு சேர்க்கிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இரவில் படுக்கும் முன் இளநீர் குடிக்கலாம்.. தேங்காயில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்கும்..

இளநீரில் எலக்ட்ரோலைட்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் இருக்கின்றது. உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறை போக்க இளநீர் நல்ல மருந்து. அதனால்தான் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநீரை மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
இளநீர் இதய நோய்களை தடுக்க வல்லது.. ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...