Publish Date: Wed, 25 Mar 2026 (21:31 IST)
Updated Date: Wed, 25 Mar 2026 (21:34 IST)
பற்களை பாதுகாப்பதில் பலருக்கும் போதிய விபரம் தெரியவில்லை என்று சொல்லவேண்டும். அதனால்தான் ஈறுகளில் பிரச்சனை, சொத்தைப்பல், பல் வலி உள்ளிட்ட பல பிரச்சனைகளை பலரும் சந்திக்கிறார்கள். உண்மையில் சில இயற்கையான முறைகள் மூலம் மருத்துவரிடமே செல்லாமல் நம்மால் பற்களை பாதுகாக்க முடியும். அவை என்னவென்று பார்ப்போம்.
புதினா இலைகளை நன்றாக வெயிலில் காயவைத்து பொடி செய்ய வேண்டும். அதன்பின் அதில் கால் பங்கு உப்பு சேர்த்து பல் துலக்கினால் பற்களில் வலி வராது. வேப்பம் குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
ஓமம், கிராம்பு, கற்பூரம் ஆகியவற்றை தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரத்திற்குப்பின் வாய் கொப்பளித்தால் பல் ஈறில் உள்ள வீக்கம் தீரும். கொய்யா இலையை நன்றாக மென்று வெந்நீரில் வாய்கொப்பளித்தால் பல் கூச்சம் நீங்கும்.
சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறையும் வாயை நன்றாகக் கொப்பளிக்க வேண்டும். தூங்குவதற்கு முன்பும், எழுந்த பின்பும் கண்டிப்பாக பல் தேய்க்க வேண்டும். அதேபோல், பற்களை தேய்க்கும் போது ஈறுகளைத் நன்றாக தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். அப்படி செய்யும்போது பற்களும், ஈறுகளும் வலுவடையும்.