Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ லவ் எம்ஐ: ரூ.3500 வரை விலை குறைந்த சியோமி

ஐ லவ் எம்ஐ: ரூ.3500 வரை விலை குறைந்த சியோமி
, புதன், 5 டிசம்பர் 2018 (15:27 IST)
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்களை கவர மேலும் பல சலுகைகளை வழங்கி வருகிறது. 
 
ஆம், அமேசான் தளத்தில் சியோமி சிறப்பு விற்பனையை நடத்தவுள்ளது. இந்த சலுகை 6 ஆம் தேதி துவங்கி 8 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த விற்பனையில் மூன்று சலுகைகள் வழங்கப்படவுள்ளது. 
 
இதில் முதல் இரண்டு சலுகைகளை அறிவித்துள்ளது. மூன்றாவது சலுகை பின்னர் அறிவிக்கப்படும். அந்த 2 சலுகைகள்: சியோமி Mi ஏ2 ஸ்மார்ட்போன் ரூ.3,500 வரை தள்ளுபடி, ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் ரூ.2000 வரை தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும். 
webdunia
இதே போல் சியோமியும் தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது. அதாவது சியோமியின் ஐ லவ் எம்ஐ விற்பனையில் சியோமி Mi ஏ2 மற்றும் ரெட்மி வை2 ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்குகிறது. 
 
ரெட்மி வை2 (3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி) விலை ரூ.1,500 குறைக்கப்பட்டு ரூ.8,999 விலையிலும், ரெட்மி வை2 (4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி) விலை ரூ.2,500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
 
இந்த தள்ளுபடி விற்பனையும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் டிசம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெரும். மேலும், அமேசானில் விலை குறைப்பு, எக்சேஞ்ச் சலுகை, வட்டியில்லா மாத தவணை ஆகியவையும் வழங்கப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டேட்டிங் ஆப்பால் இளம்பெணுக்கு நேர்ந்த பரிதாபம்