ஏர்செல் நிறுவனம் பெரும் நிதி நெருக்கடி காரணமாக இழப்பை சந்தித்தது. மேலும், தற்போது ஏர்செல் திவால் என அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்களது எண்ணை போர்ட் செய்து வருகின்றனர். இதற்கு கால அவகாசமும் டிராய் வழங்கியுள்ளது. ஏர்செல் எண்ணை போர்ட் செய்யும் பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வோடபோன் தனது 4ஜி சேவையை தமிழகத்தில் 1800-க்கும் மேற்பட்ட நகரங்களில் விரிவுபடுத்த துவங்கியுள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மேலும், ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்கள் நிறுவனத்துக்கு மாறிக்கொள்வதற்கு உதவும் வகையில் வாரத்தின் 7 நாட்களும் தங்களது அலுவலகங்கள் செயல்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோடபோனுக்கு தமிழகத்தில் மொத்தம் 1.6 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை வோடபோன் ரூ.450 கோடி முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.