Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.2,899-க்கு ஸ்மார்ட்போன்: வோடபோன் மைக்ரோமேக்ஸ் அதிரடி!!

Advertiesment
ரூ.2,899-க்கு ஸ்மார்ட்போன்: வோடபோன் மைக்ரோமேக்ஸ் அதிரடி!!
, செவ்வாய், 24 அக்டோபர் 2017 (17:10 IST)
இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் மற்றும் வோடபோன் இணைந்து பாரத் 2 அல்ட்ரா என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளன. 


 
 
புதிய மற்றும் பழைய வோடபோன் வாடிக்கையாளர்கள் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போனினை ரூ.2,899 செலுத்தி வாங்கலாம்.
 
இத்துடன் மாதம் குறைந்தபட்சம் ரூ.150-ஐ தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ரீசார்ஜ் செய்தால் 18 மாதங்களுக்கு பின் ரூ.1000 கேஷ்பேக் பெற முடியும். 
 
மைக்ரோமேக்ஸ் பாரத் 2 அல்ட்ரா சிறப்பு அம்சங்கள்:
 
# 4.0 இன்ச் WVGA ஸ்கிரீன், 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
 
# 512 எம்பி ரேம், 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
 
# 2 எம்பி பிரைமரி கேமரா, 0.3 எம்பி செல்ஃபி கேமரா
 
# 1300 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டுள்ளது.
 
கேஷ்பேக் பணம் வோடபோன் எம்-பேசா கணக்கில் சேர்க்கப்படும். இந்த ஸ்மார்ட்போன், அனைத்து விற்பனை மையங்கள் மற்றும் வோடபோன் ஸ்டோர்களில் நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுவனுக்கு சிகிச்சையளித்த துப்பரவு பணியாளர் - மதுரை மருத்துவமனையில் அதிர்ச்சி