Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.1,399-க்கு ஸ்மார்ட்போன்: ஏர்டெல் அதிரடி அறிவிப்பு!!

Advertiesment
ரூ.1,399-க்கு ஸ்மார்ட்போன்: ஏர்டெல் அதிரடி அறிவிப்பு!!
, புதன், 11 அக்டோபர் 2017 (20:28 IST)
ஏர்டெல் மற்றும் கார்பன் மொபைல் நிறுவனம் இணைந்து கார்பன் A40 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் வெளியிட இருக்கின்றன. 


 
 
இந்த ஸ்மார்ட்போன் 22 இந்திய மொழிகளை சப்போர்ட் செய்யும். இந்த 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
கார்பன் A40 சிறப்பு அம்சங்கள்:
 
# 4.0 இன்ச் 800x480 பிக்சல் WVGA டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே,
 
# 1 ஜிபி ராம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரி,
 
# 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 0.3 எம்பி செல்ஃபி கேமரா,
 
# டூயல் சிம் ஸ்லாட், 1400 எம்ஏஎச் பேட்டரி திறன்.
 
ஏர்டெல் சலுகைகள்: 
 
ரூ.169 விலையில் அன்லிமிட்டெட் காலிங் மற்றும் தினமும் 0.5 ஜிபி 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படும். 
 
முதலில் ஸ்மார்ட்போன் வாங்குவோர் ரூ.2,899 பணம் செலுத்தி தொடர்ச்சியாக 36 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டும். 
 
அதன் பின்னர் 18 மாதங்களுக்கு பின் ரூ.500 திரும்ப பெறுவதோடு 36 மாதங்களுக்கு பின் ரூ.1000 என மொத்தம் ரூ.1,500 வரை சலுகை பெற முடியும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டம் திடீர் வாபஸ்!