பட்டி டிங்கரிங் பார்த்துட்டு, புது ஆஃபராம்... டாட்டா ஸ்கை டகால்டி!

வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (13:39 IST)
டாட்டா ஸ்கை நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே இருந்த ஆஃபரை சில மாற்றங்களுடன் புது ஆஃபராக வழங்கியுள்ளது. 
 
இந்தியாவில் டிடிஎச் சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக இருப்பது டாட்டா ஸ்கை. இந்நிறுவனம் தனது வாடிக்கையாளகளுக்கு புது ஆஃபரை வாங்கியுள்ளது.

ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஆஃபரில் பட்டி டிங்கரின் வேலை பார்த்து அதாவது சில மாற்றங்களை மேற்கொண்டு இந்த ஆஃபரை வழங்கியுள்ளது. 
ஆம், டாடா ஸ்கையில் 12 மாதத்திற்கு உண்டான கட்டணம் செலுத்தினால், கூடுதலாக 1 மாதத்திற்கான சேவை இலவசமாக வழங்கப்படுகிறது என்பதுதான் அந்த புது ஆஃபர். 
 
இதற்கு முன்னாள் இந்த ஆஃபரில் 11 மாதங்களுக்கு கட்டணம் செலுத்தினால், 1 மாதம் கூடுதல் சேவை வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 
 
குறிப்பு: 12 மாதம் கட்டணம் என்பது வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் பேக்குகளைப் பொறுத்து மாறுபடும். அதோடு குறைந்தபட்ச கட்டண நிர்ணயம், சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இனி 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம்.. ஆச்சரியப்படுத்தும் முதல்வரின் திட்டம்