Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விற்பனைக்கு வந்தது பட்ஜெட் விலை விவோ இசட்1 ப்ரோ

Advertiesment
விற்பனைக்கு வந்தது பட்ஜெட் விலை விவோ இசட்1 ப்ரோ
, ஞாயிறு, 28 ஜூலை 2019 (15:26 IST)
விவோ நிறுவனத்தின் புதிய வரவான, ஃப்ளாஷ் சேல்களில் நல்ல விற்பனை கண்ட விவோ இசட்1 ப்ரோ மொபைல்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன.

விவோ நிறுவனம் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் குறைந்த விலையில் அறிமுகம் செய்த மாடல் இசட் 1 ப்ரோ. ஏற்கனவே இரண்டு முறை விடப்பட்ட ஃப்ளாஷ் சேல்களில் மொத்தமும் விற்பனையாகியது. வாடிக்கையாளர்களும் அதன் சிறப்பம்சங்கள் அருமையாக இருப்பதாக கருத்து தெரிவித்தனர். வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவால் தற்போது ஆன்லைன் மற்றும் கடைகளிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

6.5 இன்ச் தொடுதிரை கொண்டது. குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 712 பிராஸசர் உள்ளது. பின்புறம் 16 எம்.பி, 8 எம்.பி, 2 எம்.பி ஆகிய அளவுகளில் மூன்று கேமராக்கள் உள்ளன. முன்பக்கம் 32 எம்.பி அளவுள்ள கேமரா உள்ளது. பேட்டரி 5000 எம்.ஏ.ஹெச் பவர் கொண்டது. 64 ஜி.பி போன் மெமரி உள்ளது. 256 ஜி.பி வரை மெமரிகார்டு உபயோகப்படுத்தும் வசதியும் உள்ளது.

இந்த மாடல் 4 ஜி.பி ரேம் மற்றும் 6 ஜி.பி ரேம் ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது. 4 ஜி.பி ரேம்/64 ஜி.பி மெமரி கொண்ட மாடல் 14,990 ரூபாயும், 6 ஜி.பி ரேம்/ 128 ஜி.பி மெமரி கொண்ட மாடல் 17,990 ரூபாயும் விற்கப்படுகிறது. மிரர் ப்ளாக், சோனிக் ப்ளாக், சோனிக் ப்ளூ ஆகிய மூன்று வண்ணங்களில் இந்த மாடல் விற்பனைக்கு கிடைக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யூடியூப் மூலம் மாதம் ரூ.21 கோடி சம்பாதிக்கும் 6 வயது சிறுமி!