Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

5 ஜிபி டேட்டா: ஓவர் ஆட்டம் போட்ட வோடபோன், ஏர்டெல்லை அடக்கிய ஜியோ!

Advertiesment
reliance jio 4g plans
, செவ்வாய், 16 ஜூலை 2019 (12:53 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு நாளைக்கு 4 ஜிபி, 5 ஜிபி டேட்டா என ஆஃபர்களை வழங்கி மற்ற நிறுவனங்களுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. 
 
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீப காலமாக எந்த சலுகைகளையும் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் இருந்த நிலையில் இப்போது சூப்பர் ஆஃபர் ஒன்றை வழங்கியுள்ளது. 
 
4 ஜிபி டேட்டா ப்ளான்: 
ரூ.509-க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 4 ஜிபி என மொத்தம் 112 ஜிபி   28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அதோடு தினமும் 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிடேட் வாய்ஸ்கால், இலவச ஜியோ ஆப் சந்தாவும் வழங்கப்படுகிறது. 
webdunia
5 ஜிபி டேட்டா ப்ளான்: 
ரூ.799-க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 5 ஜிபி என மொத்தம் 28 நாட்களுக்கு 140 ஜிபி வழங்கப்படுகிறது. அதோடு தினமும் 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிடேட் வாய்ஸ்கால், இலவச ஜியோ ஆப் சந்தாவும் வழங்கப்படுகிறது. 
 
ஜியோ சலுகை வழங்காததால் போட்டி போட்டு சலுகைகளை வழங்கி வந்த வோடபோன் மற்றும் ஏர்டெல் தற்போது ஜியோ வழங்கி உள்ள ஆஃபரால் என்ன செய்வதென தெரியாமல் கலக்கத்தில் உள்ளன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எச்.ஐ.வி.பாதித்த மாணவரை பள்ளியில் சேர்க்க முடியாது… தலைமை ஆசிரியரின் மனித தன்மையற்ற செயல்..