Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.77,000 வரை சேமிப்பு சலுகை: ஆண்டு இறுதியில் அதிரடி காட்டும் நிஸான்!!

Advertiesment
ரூ.77,000 வரை சேமிப்பு சலுகை: ஆண்டு இறுதியில் அதிரடி காட்டும் நிஸான்!!
, சனி, 30 டிசம்பர் 2017 (12:03 IST)
2017 ஆம் ஆண்டு இறுதியை எட்டியுள்ள நிலையில் நிஸான் கார் நிறுவனம் தங்களது கார் விலைகள் மீது தள்ளுபடி அறிவித்துள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு....
 
நிஸான் டெரானோ:
நிஸான் டெரானோ எஸ்யூ மீது அதிகபட்சமாக ரூ.77,000 சேமிப்பு சலுகைகளை பெற முடியும். அதாவது, ரூ.45,000 மதிப்புடைய முதல் ஆண்டுக்கான இலவச இன்ஸ்யூரன்ஸ். அரசு ஊழியர்களுக்கு ரூ.12,000 தள்ளுபடி, ரூ.20,000 வரை விலையில் தள்ளுபடி மற்றும் 7.99% வட்டியில் கார் கடன் வசதி வழங்கப்படுகிறது. 
 
நிஸான் சன்னி:
நிஸான் சன்னி கார் மீது அதிகபட்சமாக ரூ.65,000 சேமிப்பு சலுகைகளை பெற முடியும். அதாவது, ரூ.35,000 மதிப்புடைய முதல் ஆண்டுக்கான இலவச இன்ஸ்யூரன்ஸ். ரூ.20,000 வரை விலையில் தள்ளுபடி, அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 தள்ளுபடி மற்றும் 7.99%வட்டியில் கார் கடன் வசதி வழங்கப்படுகிறது. 
 
நிஸான் மைக்ரா:
நிஸான் மைக்ரா கார் மீது அதிகபட்சம் ரூ.63,000 வரை சேமிப்பு சலுகைகளை பெற முடியும். அதாவது, ரூ.25,000 மதிப்புடைய முதல் ஆண்டுக்கான இலவச இன்ஸ்யூரன்ஸ். அரசு ஊழியர்களுக்கு ரூ.8,000 சிறப்பு தள்ளுபடி, ரூ.30,000 விலையில் தள்ளுபடி மற்றும் 7.99% வட்டியில் கார் கடன் வழங்கப்படுகிறது. 
 
நிஸான் மைக்ரா ஆக்டிவ்:
நிஸான் மைக்ரா ஆக்டிவ் கார் மீது ரூ.56,000 சேமிப்பு சலுகை பெறலாம். அதாவது, ரூ.20,000 மதிப்புடைய முதல் ஆண்டுக்கான இலவச இன்ஸ்யூரன்ஸ். ரூ.30,000 வரை விலையில் தள்ளுபடி, அரசு ஊழியர்களுக்கு ரூ.6,000 தள்ளுபடி மற்றும் 7.99% வட்டியில் கார் கடன் வழங்கப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மௌனம் கலைத்த எடப்பாடி: ஆயிரம் தினகரன் வந்தாலும் ஒன்றும் செய்துவிட முடியாது!