Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜியோ ப்ரைம்: 2K18 பட்ஜெட் விலை டபுள் ஆஃபர்!!

Advertiesment
ஜியோ ப்ரைம்: 2K18 பட்ஜெட் விலை டபுள் ஆஃபர்!!
, சனி, 23 டிசம்பர் 2017 (15:39 IST)
ஜியோவிற்கு போட்டியாக மற்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகியவை தொடர்ந்து புது புது சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் ஜியோ 2018 ஆம் ஆண்டிற்கான சிறப்பு சலுகையை வெளியிட்டுள்ளது. 
 
புத்தாண்டை முன்னிட்டு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகைகள் அறிவித்துள்ளது. குறைந்த விலையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகைகளில் தினசரி டேட்டா, வாய்ஸ் கால், ரோமிங், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் ஆகியவை பிரைம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.  
 
ரூ.199 ரீசார்ஜ்: 
 
ரூ.199-க்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில் தினமும் 1.2 ஜிபி 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் 33.6 ஜிபி வரை அதிவேக டேட்டாவினை ஒரு ஜிபி டேட்டா ரூ.6-க்கு பெற முடியும். 
 
ரூ.299 ரீசார்ஜ்: 
 
ரூ.299 திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா பயன்படுத்தியதும் இண்டர்நெட் வேகம் நொடிக்கு 128 கேபியாக குறையும். இத்துடன் எஸ்எம்எஸ்,  வாய்ஸ் கால் சேவைகளும் கிடைக்கும். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்துகலாம் நினைவிடத்தில் குடியரசுத்தலைர் ராம்நாத் கோவிந்த் மரியாதை!