Webdunia - Bharat's app for daily news and videos

Install App

32 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை: அதிர்ச்சியில் மக்கள்!

Webdunia
வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (10:49 IST)
கடந்த சில வாரங்களில் வேகமாக விலை உயர்ந்த தங்கம் 32 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.

உலகளாவிய அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகமானதால் தங்கத்தின் விலையும் கடந்த சில வாரங்களில் மிக வேகமாக உயர்ந்துள்ளது. விலை அதிகரித்த சூழலில் இந்த வார இறுதிக்குள் தங்கத்தின் விலை 32 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படியே இன்று சவரனுக்கு 272 ரூபாய் விலை உயர்ந்து 22 காரட் தங்கம் 32 ஆயிரத்து 96 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 4ஆயிரத்து 12 ரூபாயாக உள்ளது. தங்கம் விற்பனையில் முதன்முறையாக தங்கம் விலை 32 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை இந்த அளவுக்கு விலை உயர்வது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

வரலாறு காணாத இந்த விலையேற்றம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்து தோல்வி பழனிசாமியை மக்கள் நம்ப மாட்டார்கள்: முதல்வர் ஸ்டாலின்

ரத்தப்பணம் வேண்டாம்.. மன்னிக்க முடியாது.. நிமிஷாவால் கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் உறுதி..!

கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்.. மீண்டும் குறைகிறது ரெப்போ வட்டி விகிதம்..!

புதினிடம் பேசி போரை நிறுத்துங்கள்.. இல்லையெனில் உங்களுக்கு தான் பாதிப்பு: இந்தியாவுக்கு நேட்டோ எச்சரிக்கை..!

நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவித்து மோசடி.. 2 பேடிஎம் ஊழியர்கள் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments