தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில் நேற்று தங்கம் விலை 64 ஆயிரத்து தாண்டியது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளதை அடுத்து ரூ.65 ஆயிரத்தை நெருங்கி உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 35 ரூபாயும் ஒரு சவரனுக்கு 260 ரூபாயும் உயர்ந்துள்ள நிலையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ரூபாய் 8,070 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 260 உயர்ந்து ரூபாய் 64,560 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,803 எனவும் ஒரு சவரன் ரூபாய் 70,424 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 109.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 109,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது