Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்ட் நம்பர் இல்ல; சிவிவி இல்ல.. ஃபைன் இல்ல: புதுவித கிரெடிட் கார்ட் அறிமுகம்!

Webdunia
புதன், 27 மார்ச் 2019 (20:58 IST)
அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் நடைபெற்ற ஆப்பிள் நிறுவன நிகழ்வில் ஆப்பிள் கிரெடிட் கார்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கிரெடிட் கார்ட் குறித்த விரிவான விவரம் பின்வருமாறு...
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கிரெடிட் கார்டினை 'ஆப்பிள் பே' பயன்படும் அனைத்து சேவைகளிலும் பயன்படுத்தலாம். இந்த ஆப்பிள் கார்டில் கிரெடிட் கார்டு நம்பர், சிவிவி எண் உள்ளிட்ட எதுவும் இடம்பெற்றிருக்காது. 
 
ஆனால், கிரெடிட் கார்ட் குறித்த தகவல் அனைத்தும் ஐபோனின் வாலெட் பகுதியில் இடம்பெற்றிருக்கும். அதோடு, ஆப்பிள் கிரெடிட் கார்டு கொண்டு பயனர்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் அவற்றை எங்கு வாங்கினார்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் எதுவும் சேகரிக்கப்படாது. 
ஆப்பிள் கிரெடிட் கார்டு‌ மூலம் செய்யும் பரிமாற்றங்களுக்கு 2% கேஷ்பேக் வழங்கப்படும். மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களை வாங்கினால் 3% கேஷ்பேக் வழங்கப்படும்.
 
கிரெடிட் கார்ட் கட்டணத்தை தாமதாக செலுத்தினால் எவ்வித கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ள ஆப்பிள் கிரெடிட் கார்டை தற்போது குறிப்பிட்ட  வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments