மிஸ்டு கால் கொடுத்தா போதும்... ஜியோ இலவச டேட்டா ஆஃபர்

திங்கள், 25 மார்ச் 2019 (20:59 IST)
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு செலபிரேஷன் பேக் என்ற ஒன்றை வழங்கி வருகிறது. இந்த செலபிரேஷன் பேக் ஜியோ தனது இரண்டாம் ஆண்டு பயணத்தை துவங்கியது முதல் வழங்கபப்டுகிறது.  
 
ஜியோ செலபிரேஷன் பேக்கில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படும். 4 நாட்களுக்கு வழங்கப்படும் இந்த ஆஃபரில் மொத்தம் 8 ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கிடைக்கும்.
 
இந்த செலபிரேஷன் பேக் தெர்வு செய்யப்பட்ட ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். உங்கள் ஜியோ மொபைல் எண்ணிற்கு இந்த ஆஃபர் கிடைத்துள்ளா என்பதை ஜியோ செயலியில் மை ப்ளான்ஸ் பகுதிக்குள் சென்று தெரிந்துக்கொள்ளாம். 
 
அப்படியில்லை என்றால் 1299 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்தும் தெரிந்துகொள்ளலாம். மிஸ்டுகாலுக்கு பின் வரும் எஸ்எம்எஸ் மூலம் சிறப்பு சலுகை இருக்கிறதா என தெரிவிக்கப்படும்.  
 
அப்படி ஜியோ செலபிரேஷன்ஸ் பேக் ஆக்டிவேட் ஆகியிருந்தால், ஜியோ செலபிரேஷன்ஸ் பேக் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது: பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்