பிரதான மந்திரி ஷ்ரம் யோகி மன்-தன் (PM-SYM) யோஜனா எனப்படும் ஒரு ஓய்வூதியத் திட்டம், 2019 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது அறிமுகம செய்யப்பட்டது. இந்த ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி என தெரிந்துக்கொள்ளுங்கள்...
இந்த திட்டத்தின் படி, தனிநபர்களுக்கு ரூ.3,000 மாதாந்த ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்த திட்டத்தில் தனிப்பட்ட நபர் மரணமடைந்தால், குடும்பத்திற்கான குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் யார் சேரலாம்?
திட்டத்தில் சேர, பின்வரும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
1. தனிநபர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட துறை தொழிலாளியாக இருக்க வேண்டும்
2. தனிநபரின் வயது 18 முதல் 40 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்
3. மாதாந்திர வருமானம் ரூ.15,000த்துக்கு குறைவாக இருக்க வேண்டும்
தேவையான ஆவணங்கள்:
1. ஆதார் கார்ட்
2. சேமிப்பு வங்கி கணக்கு / ஜன-தன் கணக்கு
3. சரியான மொபைல் எண்
எப்படி விண்ணப்பிப்பது?
PM-SYM யோஜனாவின் கீழ் ஒரு கணக்கு திறக்க விரும்பினால், அருகில் உள்ள பொது சேவை மையம் (CSC) சென்று, உங்கள் ஆவணங்கள் அதாவது, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு, மொபைல் ஆகியவற்றை எடுத்து சென்று IFSC குறியீட்டை சரிபார்த்து அங்குள்ள அதிகாரிகள் ஒரு படிவத்தை நிரப்புவார்கள். விவரங்களை சரிபார்த்தவுடன், கடவுச்சொல் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் பின்னர் விண்ணப்பித்தல் நிறைவடையும்.
CSC-ல் பதிவு விண்னப்பித்ததும், இந்த திட்டத்தின் கீழ் ஒரு ஆன்லைன் ஓய்வூதிய எண் உருவாக்கப்படும். சிஎஸ்சி மையம் உங்களுக்கு ஓய்வூதிய திட்ட அட்டை வழங்கும். அதில், ஓய்வூதிய திட்ட அட்டை பெயர், ஓய்வூதிய தொடக்கத் தேதி, மாதாந்த ஓய்வூதிய தொகை, ஓய்வூதியக் கணக்கு போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
குறிப்பு: ஒழுங்கமைக்கப்பட்ட துறையின் அல்லது ஊழியர் சேமலாப நிதியம் (EPF), தேசிய ஓய்வூதிய முறை (NPS) அல்லது பணியாளர் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ESIC) அல்லது வருமான வரி செலுத்துபவர் ஆகியோருக்கான தனிநபர்கள் இந்த திட்டத்திற்கு தகுதியற்றவர்கள்.