தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது இடத்தை தக்கவைத்துக்கொள்ளவும், வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் அவ்வப்போது பல சேவைகளை சலுகை விலையில் வழங்கி வருகின்றன.
இந்நிலையில் ஏர்டெல் அன்லிமிட்டெட் காம்போ ஆஃபர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ரூ.995 என நிர்ணயிக்கப்பட்ட இந்த ரீசார்ஜ் விலையில் கூடுதல் சேவைகள் பல வழங்கப்பட்டுள்ளன.
வரமற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள். இந்த அழைப்புகளுக்கு தினசரி மற்றும் வாராந்திர கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. இத்துடன் மாதம் 1 ஜிபி அளவிலான 3 ஜி/ 4ஜி டேட்டா சேவை, 180 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும், 18,000 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் தெலுங்கானா, டெல்லி என்.சி.ஆர், கர்நாடகாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
ஏர்செல் நிறுவனம் தற்போது தனது சேவையை நிறுத்த்திக்கொள்ள உள்ளதால், இது போன்ற சேவைகளை ஏர்டெல் நிறுவனம் தமிழகத்தை குறிவைத்து வழங்குவதன் மூலம் ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல்லுக்கு போர்ட் செய்ய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.