இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் இலவசங்களை அறிமுகம் செய்து, அதன் பின்னர் குறைந்த விலை சேவைகளை வழங்கி வரும் ஜியோவால் மற்ற நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களையும் வருமானத்தையும் இழந்து வருகிறது.
இந்நிலையில், பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆம், நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் இணைந்து ரூ.500 மற்றும் அதற்கும் குறைந்த விலையில் 4ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் மொபைல் போன் தயாரிப்பாளர்களுடன் இணைந்து ஜியோவின் ஃபீச்சர் போன்களை விட குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் ரூ.60-70 விலையில் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா சேவை வழங்கும் மாதாந்திர திட்டமும் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.