Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்...!!

Advertiesment
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்...!!
தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது என பலரும் கூறியது கேள்விப்பட்டிருப்போம். ஆம், தண்ணீர் குடிப்பதால் எண்ணற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். தினமும் தண்ணீர் குடிப்பதால் வயிறு சுத்தமாவதுடன், உடலில் உள்ள  நச்சுக்கள் சிறுநீர், மலம் மூலம் வெளியேறிவிடும்.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், ரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரித்து, அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைப்பதால், நமது  உடலானது எனர்ஜியுடன் இருக்கும்.
 
அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து,  உடல் எடை குறைக்கிறது.
 
பெரும்பாலான நபர்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறையும்போது தான் தலைவலி ஏற்படுகிறது, அத்தகைய நபர்கள் தினமும் தண்ணீர் குடித்து வருவது நல்லது. குறிப்பாக காலையில் அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பும் நபர்கள், சாப்பிடாமல் செல்வது வழக்கமாகிவிட்டது. இவர்கள்  தினமும் தண்ணீர் குடிக்கும் போது பசி எடுப்பதுடன் அல்சர் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். 
webdunia
வெதுவெதுப்பான தண்ணீரை குடித்தால் உடலின் மெட்டாபாலிசம் அதிகரிப்பதுடன், உண்ணும் உணவு விரைவில் செரிமானமாகி விடும். மேலும் இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்சிஜனை கொண்டிருப்பதால் உடலானது  எனர்ஜியுடன் இருக்கும். 
 
எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். முகமும் பொலிவுடன் இருப்பதுடன், பருக்கள்  வருவது குறைந்துவிடும்.
 
தண்ணீரானது நமது உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்கள் மற்றும் கிருமிகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றி, எப்போதும் நமது உடலின் சுறுசுறுப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.
 
தண்ணீரை நாம் அதிகமாக குடித்தால், நமது உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கப்படும். இதனால் நீரிழிவு நோய் மற்றும் அடிக்கடி ஏற்படும் தலைவலி பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள் என்ன தெரியுமா...?