Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபாவளிக்கு முதல் நாள் யம தீபம் ஏற்றுவது ஏன்...?

தீபாவளிக்கு முதல் நாள் யம தீபம் ஏற்றுவது ஏன்...?
, திங்கள், 21 அக்டோபர் 2019 (15:49 IST)
தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது வழக்கத்தில் உள்ளது. யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில்  முன்னேறும். திருமணத்  தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்.
மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு உங்கள் முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று நீங்கள் திதி  கொடுத்து இருப்பீர்கள்.  அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே. அத் தீபத்தை  நீங்கள் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதஸி திதியில் ஏற்ற வேண்டும்.
 
யம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு  நலன்களைச் செய்வார்கள்.
 
தீபம் ஏற்றும் முறை:
 
* உங்கள் வீட்டின் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும். விளக்கேற்றிய பின்னர், இந்து பலிதானிகளையும் உங்கள் முன்னோரையும் மனதில் ஓரிரு நிமிடங்கள் சிந்திக்க வேண்டும்.யம தீபம் ஏற்றும் முறை:
 
* உங்கள் வீட்டின் உயரமான பகுதியில் உஅம தீபம் ஏற்றப்பட வேண்டும்.
 
* தெற்கு திசை நோக்கி விலக்கு எரிய வேண்டும்.
 
விளக்கேற்றிய பின்னர், இந்து பலிதானிகளையும் உங்கள் முன்னோர்களையும் மனதில் ஓரிரு நிமிடங்கள் சிந்திக்க வேண்டும்.
 
மந்திரம்:
 
ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய
ம்ருத்யவே சாந்த காயச
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச
ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே!
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சிதரகுப்தாய வை ஓம் நம இதி:

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவையான வேர்க்கடலை பர்ஃபி செய்வது எப்படி...?