ஜோதிடத்தில் குரு பகவான் மட்டுமே முழு சுபகிரகம். ஜாதகத்தில் குருவின் கோட்சாரம் சரியில்லாதவர்கள், குரு கிரக பெயர்ச்சியால் பாதகமான பலன்களை பெறுபவர்கள்.
இந்த திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் வியாழக் கிழமையன்று காலையில் நீராடி, பின்பு அங்கிருக்கிருக்கும் நாழி கிணற்று தீர்த்த நீரிலும் நீராடி, கோவிலுக்குச் சென்று செந்திலாண்டவருக்கு அர்ச்சனை செய்து வழிபட குரு பகவானால் நன்மைகள் ஏற்படும்.
குரு கிரக பெயர்ச்சியால் கெடுதலான பலன் ஏற்பட இருந்தவர்களுக்கும் அந்த பாதிப்பு ஏற்படாமல் காக்கும்.
முருகன் காயத்ரி மந்திரம்:
ஓம் தத் புருசாய வித்மஹே
மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்தோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.
இம்மந்திரத்தை முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமைகள், சஷ்டி, கிருத்திகை தினத்தில் முருகன் ஆலங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் முருகன் படத்தின் முன்போ நெய் விளக்கேற்றி, செந்நிற மலர்களால் முருகனை அர்ச்சித்து 108 அல்லது 1008 தடவை சொல்லி முருகனை வழிபட்டு வந்தால் துஷ்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
முருகன் அருள் கிட்டுவதோடு மட்டுமல்லாமல் குருபகவானின் அருளும் ஒருசேர கிட்டும். ஏனென்றால் குரு பரிகார நிவர்த்தி தலம் திருச்செந்தூர் ஆகும்.