Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எல்லாத்துக்கும் தோனிதான் காரணம் – யுவராஜ் சிங் தந்தை ஆவேசம்

Advertiesment
எல்லாத்துக்கும் தோனிதான் காரணம் – யுவராஜ் சிங் தந்தை ஆவேசம்
, சனி, 13 ஜூலை 2019 (12:58 IST)
இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் புறக்கணிக்கப்பட்டதற்கு அன்றைய கேப்டன் மகேந்திரசிங் தோனியே காரணம் என கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங்கின் அப்பா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர் யுவ்ராஜ்சிங். சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தார் யுவ்ராஜ்சிங். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அம்பத்தி ராயுடுவும் ஓய்வு அறிவிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நடந்து வரும் உலக கோப்பை போட்டியின் அரையிறுதியில் இந்தியா அணி நியூஸிலாந்திடம் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய யுவ்ராஜ்சிங்கின் தந்தை யோகராஜ் சிங் “2015 உலக கோப்பையில் அம்பத்தி ராயுடு தேர்வாகியிருந்தார். ஆனால் தோனி ஒரு ஆட்டத்தில் கூட ராயுடுவை விளையாட அனுமதிக்கவில்லை. இதனால் ராயுடு அவசரப்பட்டு தவறான முடிவை எடுத்து விட்டீர்கள். நீங்கள் உங்கள் முடிவை திரும்ப பெற வேண்டும். தோனி போன்றவர்கள் ரொம்ப காலம் நிலைத்திருக்க மாட்டார்கள். அந்த கூட்டத்திற்கு நீங்கள் யார் என்பதை காட்ட வேண்டும்” என கூறியுள்ளார்.

ஏற்கனவே அம்பத்தி ராயுடு, யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக் போன்றவர்களை நிறைய ஆட்டங்களில் விளையாட அனுமதிப்பதில்லை என்றும், அதற்கு தோனியே காரணம் என்றும் யோகராஜ் சிங் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”தோனி அவுட்டானது எங்களுக்கு ஒரு லக்”..மகிழ்ச்சியில் நியூஸிலாந்து வீரர்