இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆண்டர்சன் –டெண்டுல்கர் டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தொடரை சமன் செய்ததே பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது.
இந்த தொடரில் கேப்டனாக பொறுப்பேற்ற ஷுப்மன் கில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த தொடரில் அவர் இதுவரை 729 ரன்கள் சேர்த்தார் இந்த தொடருக்கு முன்பாக அவரது சராசரி 36.57 ஆக இருந்தது. ஆனால் தொடர் முடியும் போது 42 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் ஷுப்மன் கில்லின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் இந்திய வீரருமான யுவ்ராஜ் சிங் அவரை சிலாகித்துப் பாராட்டியுள்ளார். இது சம்மந்தமாக அவர் “வெளிநாடுகளில் ஷுப்மன் கில் எப்படி செயல்படப் போகிறார் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. ஆனால் கேப்டனான முதல் தொடரிலேயே, இங்கிலாந்து மண்ணில் நான்கு சதங்கள் அடித்துள்ளார். பொறுப்புக் கொடுக்கப்பட்டால் எப்படி அதைக் கையாள வேண்டும் எனக் காட்டியுள்ளார் கில்” எனப் பாராட்டியுள்ளார்.