Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘இன்னும் நீ செல்லவேண்டிய தூரம் நிறையவுள்ளது’ … தன் சாதனையை முறியடித்த சூர்யவன்ஷியைப் பாராட்டிய யூசுப் பதான்!

vinoth
செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (09:40 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டி இந்த சீசனின் மறக்க முடியாதப் போட்டியாக ரசிகர்களுக்கு அமைந்துள்ளது. குஜராத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதமடித்து உலகக் கிரிக்கெட்டை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். பவுலர்களைக் கொஞ்சம் கூட மதிக்காமல் அனைத்துப் பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பும் பேராசையோடு நேற்று வைபவ்வின் இந்த இன்னிங்ஸ் அமைந்தது. அவரின் இந்த இன்னிங்ஸ் பல முன்னாள் ஜாம்பவான்களையே ஆச்சர்யத்தில் மூழ்க வைத்துள்ளது.

அவரின் இந்த இன்னிங்ஸில் 11 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடக்கம். ஐபிஎல் கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்லுக்குப் பிறகு குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற பெருமையை சூர்யவன்ஷி பெற்றுள்ளார். மேலும் குறைந்த பந்துகளில் ஐபிஎல் சதமடித்த இந்திய வீரர் என்ற யூசுப் பதானின் (38 பந்துகளில்) சாதனையையும் முறியடித்துள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள யூசுப் பதான் “ஐபிஎல் தொடரில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற என்னுடைய சாதனையை முறியடித்த சூர்யவன்ஷிக்குப் பாராட்டுகள். என்னைப் போலவே ராஜஸ்தான் அணிக்காக விளையாடும்போது நீ இதை செய்துள்ளாய் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. ராஜஸ்தான் அணிக்கும் இளம் வீரர்களுக்கும் இடையே ஏதோ பிரிக்கமுடியாத பந்தம் உள்ளது. இன்னும் நீ செல்லவேண்டிய தூரம் நிறையவுள்ளது , சாம்பியனே!” எனப் பாராட்டியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“ஸ்ட்ரைக் ரேட் எல்லாம் முக்கியமே இல்ல..” கோலிக்கு ஆதரவாகப் பேசிய சேவாக்!

‘இன்னும் நீ செல்லவேண்டிய தூரம் நிறையவுள்ளது’ … தன் சாதனையை முறியடித்த சூர்யவன்ஷியைப் பாராட்டிய யூசுப் பதான்!

நடராஜனை அணியில் எங்கே வைப்பதென்று சொல்லுங்கள்?.. டெல்லி அணி ஆலோசகர் பீட்டர்சன் கேட்கும் அறிவுரை!

அடுத்த கட்டுரையில்
Show comments