மகளிர் உலகக் கோப்பை… பெங்களூருவில் இருந்து நவி மும்பைக்கு மாற்றம்!

vinoth
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025 (14:49 IST)
18 ஆண்டுகள் காத்திருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக் கோப்பையை வென்றது. ஆனால் அந்த சந்தோஷக் கொண்டாட்டத்தின் போது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அசதம்பாவித சம்பவத்துக்குக் காரணம் மைதானம் அமைந்துள்ள நெரிசலான இடமே  என சொல்லப்பட்டது.

இதனால் பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில் வேறொரு புதிய மைதானத்தை உருவாக்கும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் விரைவில் நடக்கவுள்ள மகளிர் உலகக் கோப்பை தொடரில் சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த போட்டிகள் கேரளாவின் திருவனந்தபுரம் மைதானத்துக்கு மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் தற்போது அந்த போட்டிகள் நவி மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால் இனிமேல் சர்வதேசப் போட்டிகள் சின்னசாமி மைதானத்தில் நடக்காதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி20 கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் திடீர் மரணம்.. அதிர்ச்சி காரணம்..!

அதிக வயதில் ஐசிசி தரவரிசையில் முதலிடம்… சச்சினின் சாதனையை முறியடித்த ரோஹித்!

யுவ்ராஜ் கொடுத்த ஜெர்ஸியை குப்பைத் தொட்டியில் போட்டார் பிராட்… தந்தை பகிர்ந்த தகவல்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த முடிவு..!

தனது ராஜா காயை தூக்கி வீசிய நகமுரா! சைலண்டாக பழிதீர்த்த குகேஷ்! - செஸ் போட்டியில் சூப்பர் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments