Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரோஹித் சர்மா ஏன் ஆஸ்திரேலியா செல்லவில்லை..?? பிசிசிஐ விளக்கம்...ரசிகர்கள் அதிர்ச்சி

ரோஹித் சர்மா ஏன் ஆஸ்திரேலியா செல்லவில்லை..?? பிசிசிஐ விளக்கம்...ரசிகர்கள் அதிர்ச்சி
, வெள்ளி, 27 நவம்பர் 2020 (17:44 IST)
ரோஹித் ஆஸ்திரேலியா செல்லாதது ஏன் என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது பிசிசியை அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று அணிகளிலுமே இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை என சொல்லப்பட்டது. இதற்குக் காரணம் அவருக்கு ஏற்பட்டுள்ள காயமே என சொலல்ப்பட்டது. ஆனால் அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் அவர் இடம்பெற்றார். ஆனாலும் ஆஸ்திரேலியா செல்லாத அவர் பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று அங்கு தனது உடல்தகுதியை நிருபிக்க பயிற்சிகள் மேற்கொண்டார். அவருடன் இஷாந்த் ஷர்மாவும் பயிற்சி மேற்கொண்டார்.

இதையடுத்து இப்போது அவர்கள் தங்கள் உடற்தகுதியை நிரூபித்துவிட்ட நிலையில் டிசம்பர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்லலாம் என அகாடமி அனுமதி அளித்துள்ளது. அப்படி 8 ஆம் தேதி சென்றால் அங்கே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதனால் 23 ஆம் தேதி வரை தனிமையில் இருந்தால் முதல் டெஸ்ட் முடிந்து இரண்டாவது டெஸ்ட் தொடங்கி இருக்கும். இரண்டாவது டெஸ்ட்டில் கலந்துகொள்ள ஒரு வாரமாவது பயிற்சி எடுக்க வேண்டும் என்பதால் இவர்களால் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் ரோஹித் ஆஸ்திரேலியா செல்லாதது ஏன் என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது பிசிசியை அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.

அதில், ரோஹித் சர்மாவின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினாலேயே அவர் ஆஸ்திரேலியாவுக்கான தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற இந்தியா வீரர்களுடன் பயணிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’அதானிக்கு கடன் கொடுக்க வேண்டாம்!!! ’’இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிக்கு இடையே பரப்பரப்பு...