Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா-ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் கிரிக்கெட்: நடராஜன் அணியில் உண்டா?

Advertiesment
இந்தியா-ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் கிரிக்கெட்: நடராஜன் அணியில் உண்டா?
, வெள்ளி, 27 நவம்பர் 2020 (07:51 IST)
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது 
 
சிட்னியில் பகலிரவு ஆட்டமாக நடைபெற இருக்கும் இன்றைய போட்டியில் தமிழக வீரர் நடராஜன் அணியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவரான சயனி முதுகுவலியால் அவதிப்படுவதாகவும், எனவே சயனிக்கு பதிலாக ஆடும் 11 பேர் அணியில் யார்க்கர் புகழ் நடராஜன் இருப்பார் என்றும் பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இன்றைய முதல் போட்டியில் நடராஜனின் யார்க்கர் எந்த அளவுக்கு விக்கெட்டுக்களை அள்ளும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆஸ்திரேலிய தொடரில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்படும் என விராட்கோலி அணியின் தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

108 நாட்கள் வனவாசம்; வீடு திரும்பிய டேவிட் வார்னர்! – வைரலான வீடியோ!