இன்று நடைபெறும் ஐபிஎல் குவாலிபயர் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு செல்லும் என்ற நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு செய்துள்ளது.
இன்றைய போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் அணிகள் இடையே வாழ்வா சாவா யுத்தமாக இருக்கும் என்பது உறுதி. இதற்கு முன்பாகவே லீக் போட்டியில் இரு அணிகளும் இவ்வாறான கடைசி நொடி வரையிலான த்ரில்லிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த நிலையில் சன்ரைசர்ஸ் அணி வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ள ராஜஸ்தான் அணி ஆரம்பமே சன்ரைசர்ஸின் ரன்களை கட்டுப்படுத்த முயலும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, ட்ராவிஸ் ஹெட், ராகுல் த்ரிபாதி, எய்டன் மர்க்ரம், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் க்ளாசன், அப்துல் சமத், பேட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், ஜெயதேவ் உனத்கட், நடராஜன்,
ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், டாம் காட்மோர், சஞ்சு சாம்சன், ரியான் பராக், துருவ் ஜுரெல், ரோமன் போவல், ரவிச்சந்திரன் அஸ்வின், ட்ரெண்ட் போல்ட், ஆவேஷ் கான், சந்தீப் சர்மா, சஹல்,