Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோலியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்… பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்த ஆர் சி பி!

கோலியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்… பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்த ஆர் சி பி!

vinoth

, புதன், 22 மே 2024 (17:35 IST)
கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் 2 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் இருந்த ஆர் சி பி, அதன் பின்னர் மீண்டெழுந்த ஆர் சி பி அணி தொடர்ச்சியாக 6 போட்டிகளை வென்று ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று அந்த அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து முதல் எலிமினேட்டர் போட்டியில் ஆட உள்ளது. அதற்காக நேற்று குஜராத் கல்லூரி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட இருந்தனர். ஆனால் அந்த செஷன் திடீரென்று ரத்து செய்யபப்ட்டுள்ளது. அதே போல ஆர் சி பி அணியின் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடக்கவில்லை.

இதற்கு கோலியின் பாதுகாப்பிலெ ஏற்பட்ட அச்சுறுத்தல்தான் காரணம் என சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக குஜராத் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின் படி நான்கு நபர்களை பயங்கரவாத நடவடிக்கைகளின் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்களாம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ன பாஸ் அடிக்கிறீங்க..? முதல் போட்டியிலேயே வங்கதேசத்தை வீழ்த்திய அமெரிக்கா!