Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கே எல் ராகுலாவது திட்டுதான் வாங்கினார்… இந்த வெளிநாட்டு வீரருக்கு அறையே விழுந்தது… ஐபிஎல் ஓனர் அட்ராசிட்டிஸ்!

கே எல் ராகுலாவது திட்டுதான் வாங்கினார்… இந்த வெளிநாட்டு வீரருக்கு அறையே விழுந்தது… ஐபிஎல் ஓனர் அட்ராசிட்டிஸ்!

vinoth

, வெள்ளி, 24 மே 2024 (07:13 IST)
கடந்த வாரம் நடந்த ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் படுதோல்வி அடைந்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. அந்த போட்டி முடிந்ததும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ராகுலிடம் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்த காட்சி வெளியாகி இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் கோயங்காவுக்கு எதிராகவும் ராகுலுக்கு ஆதரவாகவும் கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதனால் ராகுல் அடுத்த சீசனில் லக்னோ அணிக்காக ஆடமாட்டார் எனக் கருத்துகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற ஒரு குற்றச்சாட்டை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய ராஸ் டெய்லர் அந்த அணி உரிமையாளர் மேல் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பின்னர் தன்னுடைய சுயசரிதை புத்தகத்தை எழுதினார்.

அந்த புத்தகத்தில் “நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய போது ஒரு சீசனில் தொடர்ந்து சில முறை டக் அவுட் ஆனேன். அப்போது அணியின் ஓய்வறையில் உரிமையாளர் ஒருவர் ‘டக் அவுட் ஆவதற்காக உங்களுக்கு மில்லியன் கணக்கில் பணம் கொடுக்கவில்லை’ என்று கூறி என்னை நான்கைந்து முறை கன்னத்தில் அறைந்தார். அப்போது அவர் சிரித்துக்கொண்டும் இருந்தார். அதனால் அவர் உண்மையாக அறைகிறாரா அல்லது விளையாட்டுக்கு செய்கிறாரா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் பல வீரர்கள் இருக்கும் ஒரு இடத்தில் அப்படி நடந்துகொள்வது முறையானது இல்லை என்றே நம்புகிறேன்” எனக் கூறியிருந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை இந்த காரணத்தால் நிராகரித்துவிட்டேன்” – ரிக்கி பாண்டிங் தகவல்!