Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“இத்தனை வெற்றிகள் பெற்றாலும் அடக்கத்தோடு இருப்போம்” – மும்பை அணிக் கேப்டன் ஹர்திக்!

vinoth
வெள்ளி, 2 மே 2025 (07:20 IST)
இந்த சீசனின் தொடக்கத்தில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அதனால் இந்த ஆண்டு அந்த அணி ப்ளே ஆஃப் செல்வதே சந்தேகமாக இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாகப் போட்டிகளை வெல்ல ஆரம்பித்து தற்போது முதல் இடத்துக்கு வந்துள்ளது.

நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 217 ரன்கள் சேர்த்தது. விக்கெட்களையும் இழந்தது. 100 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி 14 புள்ளிகளோடு முதல் இடத்துக்கு சென்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாகப் பெறும் ஆறாவது வெற்றி இதுவாகும். மேலும் அந்த அணியின் நெட் ரன் ரேட்டும் 1.27 என்ற அளவில் உள்ளதால், அவர்கள் ப்ளே ஆஃப் செல்வது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.

நேற்றைய வெற்றிக்குப் பின்னர் பேசிய மும்பை அணிக் கேப்டன் ஹர்திக் “எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் என அனைவரும் சிறப்பாக செயல்படுகிறார்கள். இதில் யார் பெயரை சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் எளிமையானக் கிரிக்கெட்டைதான் விளையாடுகிறோம். அதுதான் எங்களுக்குக் கைகொடுக்கிறது. இந்த வெற்றி தொடரும் என்று நினைக்கிறேன். இவ்வளவு வெற்றிகள் பெற்றாலும் நாங்கள் அடக்கமாக இருக்கவே விரும்புகிறோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக செயல்பட்டாரா நடுவர்?... கிளம்பிய சர்ச்சை!

மின்னல் வேகக் கேட்ச்… பந்தைத் தேடிய கேமராமேன்… நேற்றையப் போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!

காதலில் விழுந்த ஷிகார் தவான்… இன்ஸ்டாகிராமில் அறிவித்து மகிழ்ச்சி!

“அவரை ரொம்பக் கொண்டாட வேண்டாம்…பவுலர்கள் உஷார் ஆகிவிட்டார்கள்” –சூர்யவன்ஷி குறித்து கவாஸ்கர்!

“இத்தனை வெற்றிகள் பெற்றாலும் அடக்கத்தோடு இருப்போம்” – மும்பை அணிக் கேப்டன் ஹர்திக்!

அடுத்த கட்டுரையில்
Show comments