Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிரடி காட்டிய பும்ரா! 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை அமுக்கிய மும்பை! - இரண்டாம் இடத்தில் மாஸ்!

Advertiesment
IPL 2025

Prasanth Karthick

, ஞாயிறு, 27 ஏப்ரல் 2025 (19:47 IST)

ஐபிஎல் சீசனில் இன்று பரபரப்பாக நடந்த மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.

 

டாஸ் வென்று பந்துவீச்சை லக்னோ தேர்வு செய்த நிலையில் பேட்டிங்கில் இறங்கிய மும்பை, ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரிக்கல்டன் அதிரடியாக ஆடி அரை சதம் வீழ்த்தினார். ரோஹித் சர்மா கண்ணுக்கு குளிர்ச்சியாக 2 சிக்ஸர்களை தாக்கிவிட்டு 12 ரன்களிலேயே அவுட் ஆனார். ஆனாலும் அடுத்தடுத்து வந்தவர்கள் கொஞ்சமும் சளைக்காமல் அதிரடியாகவே ஆடி வந்தனர். சூர்யக்குமார் யாதவ் சிறப்பாக விளையாடி ஒரு அரைசதம் விளாசினார்.

 

இன்று திலக் வர்மாவும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் 6 ரன்கள், 5 ரன்களில் அவுட் ஆகியிருந்தாலும், மொத்தமாக அணி 215 என்ற ஸ்கோரை எட்டியது.

 

216 என்ற டார்கெட்டுடன் இறங்கிய லக்னோவை மும்பை அணி பந்துவீச்சில் சூப்பராக கண்ட்ரோல் செய்தது. லக்னோவின் ஓப்பனர் எய்டன் மர்க்ரம் 9 ரன்களில் அவுட் ஆனாலும், மிட்ஷெல் மார்ஷ் - நிக்கோலஸ் பூரண் காம்போ நின்று அதிரடி காட்டி வந்தார்கள். சூப்பர் ஓவர் முடிந்த கையோடு பூரண் விக்கெட்டை தூக்க, அடுத்த பந்தில் பவுண்டரி அடித்த ரிஷப் பண்ட் அதற்கடுத்த பந்திலேயே விக்கெட் கொடுத்து வெளியேறினார்.

 

11.2வது பந்தில் மார்ஷும் விக்கெட்டை இழக்க, பின்னர் ஆயுஷ் பதோனியும், டேவிட் மில்லரும் முடிந்தளவு ஸ்கோரை முன்னகர்த்த முயன்றனர். ஆனால் 14, 15வது ஓவர்களில் அவர்களும் அவுட் ஆக அதன் பின்னர் அப்படியே ஆட்டம் மும்பை பக்கம் திரும்பியது. அதன் பின்னர் சமத், பிஷ்னோய் என எல்லாரும் சொற்ப ரன்களில் அவுட்டாக லக்னோ அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் சரணடைந்தது. இந்த வெற்றி மூலம் மும்பை அணி கிடுகிடுவென புள்ளிப்பட்டியலில் உயர்ந்து 2வது இடத்திற்கு சென்று விட்டது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

300 சிக்ஸர்கள் சாதனையை தவறவிட்ட ரோஹித் சர்மா.. அடுத்த போட்டியில் நிகழ்த்துவாரா?