நடந்து வரும் ஐபிஎல் தொடரில் பரிதாபகரமான நிலையில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி அடுதத்டுத்து ஐந்து வெற்றிகளைப் பெற்று தற்போது புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு அந்த அணிக்குப் பிரகாசமாகியுள்ளது.
நேற்று மாலை நடந்த லக்னோ அணிக்கு எதிரானப் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் தொடரில் எந்த அணியும் படைக்காத சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. இது ஐபிஎல் தொடர்களில் மும்பை அணியின் 150 ஆவது வெற்றியாகும். இந்த மைல்கல்லை எட்டியுள்ள ஒரே அணியாக மும்பை இந்தியன்ஸ் உள்ளது.
ஐபிஎல் தொடரில் பல வருடங்களாக ஆதிக்கம் செலுத்தும் ஒரு அணியாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஐந்துக் கோப்பைகளை வென்றுள்ளது.