Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இறுதிப்போட்டியில் பவுண்டரி லைன் நகர்ந்ததுக்குக் காரணம் கோலியா… இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ!

Advertiesment
இறுதிப்போட்டியில் பவுண்டரி லைன் நகர்ந்ததுக்குக் காரணம் கோலியா… இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ!

vinoth

, செவ்வாய், 9 ஜூலை 2024 (07:39 IST)
இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி 20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சி இன்னும் இந்திய ரசிகர்கள் ஓயவில்லை. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி  இந்தியா நிர்ணயித்த 176 ரன்கள் இலக்கைத் துரத்தியது. விக்கெட்கள் விழுந்தாலும் கிளாசன் அதிரடியாக ஆடி இலக்கை தொடும் தூரத்துக்குக் கொண்டுவந்துவிட்டார். அவர் அதிரடியால் தென்னாப்பிரிக்கா அணிக்கு கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் அதன் பிறகு இந்திய பவுலர்களின் அசத்தலான பவுலிங்காலும் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்களை இழந்ததாலும் அந்த அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

அந்த அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த டேவிட் மில்லர் கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று எல்லைக் கோட்டருகே சூர்யகுமாரின் ஒரு அபாரமான கேட்ச்சால் அவுட்டானார். ஆனால் கேட்ச் சரியான கேட்ச் இல்லை என்றும், அவர் கேட்ச் பிடித்த இடத்தில் பவுண்டரி லைன் குஷன் விலகி இருந்த அச்சு தெரிவதாகவும் சில ரசிகர்கள் விமர்சனம் செய்துவந்தனர். இதில் இந்திய ரசிகர்களும் அடக்கம்.

இந்நிலையில் அந்த போட்டியில் பவுண்டரி லைன் நகர்ந்ததற்கு இந்திய அணி பேட்ஸ்மேன் விராட் கோலிதான் காரணம் என்று தற்போது ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் கோலி பேட் செய்யும் போது முதல் ஓவரில் அடித்த பவுண்டரி ஒன்றை தடுக்க சென்ற தென்னாப்பிரிக்க வீரர் பவுண்டரி குஷனை தள்ளிவிட்டுள்ளார். அதை சரிசெய்யாமல் அப்படியே இருந்தததால்தான் சூர்யகுமார் கேட்ச் குறித்த சர்ச்சைகள் எழுந்தன.  இந்நிலையில் இந்த வீடியோ இப்போது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி..! தேசிய கொடியை ஏந்துகிறார் பி.வி சிந்து..!!