பல ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூர் கிரிக்கெட்டில் களமிறங்கும் விராட் கோலி!

vinoth
செவ்வாய், 21 ஜனவரி 2025 (07:08 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இழந்துள்ளது.

இதன் காரணமாக சீனியர் வீரர்கள் உள்பட அனைவரும் ஓய்வு கிடைக்கும் போது உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையேற்று ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தங்கள் மாநில அணிகளுக்காக விளையாட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது விராட் கோலியும் டெல்லி அணிக்காக ரஞ்சி போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளார். டெல்லி மற்றும் ரயில்வே அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் அவர் களமிறங்கவுள்ளார். இதன் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோலி உள்ளூர் கிரிக்கெட்டுக்கு திரும்புகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலகக்கோப்பை நட்சத்திரங்கள்: தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷை கௌரவப்படுத்த ஈஸ்ட் பெங்கால் கிளப் திட்டம்!

ஏபிடி தயவு செஞ்சு எனக்கு அந்த விஷயத்துல உதவி செய்ங்க… சூர்யகுமார் யாதவ் கோரிக்கை!

உலகக் கோப்பையை வென்றதும் கல்யாணம்தான்… கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு!

போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளேன்… முன்னாள் ஜிம்பாப்வே கேப்டன் அறிவிப்பு!

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியா கோப்பை: இந்திய ஏ அணியில் வைபவ் சூர்யவன்ஷி.. கேப்டன் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments