டெல்லி சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய மூன்று கட்சிகளும் விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றன. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு மும்முனை போட்டி இருக்கும் நிலையில், மூன்று கட்சிகளுமே விதவிதமான வாக்குறுதிகளை அள்ளி வழங்கி வருகிறது.
அந்த வகையில், காங்கிரஸ் கட்சியும் வாக்குறுதிகளை அள்ளி வீசி உள்ளது. ஏற்கனவே வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ₹8500, மருத்துவ காப்பீடு வகைக்காக ₹25 லட்சம், மற்றும் பெண்களுக்கு மாதம் ₹2500 வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில், தற்போது டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும், கேஸ் சிலிண்டர் ₹500-க்கு வழங்கப்படும் என்றும், அது மட்டும் இன்றி இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மேற்கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ் உறுதி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.