Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லக்னோ அணிக் கேப்டனாக ரிஷப் பண்ட்டை அறிவித்தார் சஞ்சய் கோயங்கா!

vinoth
திங்கள், 20 ஜனவரி 2025 (15:00 IST)
ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக கே எல் ராகுல் லக்னோ அணியால் கழட்டிவிடப்பட்டார். கடந்த ஆண்டு ராகுலுக்கும் அணி உரிமையாளர் சஞ்சய் கோயங்காவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.

இதையடுத்து நடந்த மெஹா ஏலத்தில் லக்னோ அணி ரிஷப் பண்ட்டை 27 கோடி ரூபாய் செலவு செய்து எடுத்தது. இதுவரை ஐபிஎப் தொடரில் எந்தவொரு அணியும் இவ்வளவு தொகை செலவு செய்து ஒரு வீரரை ஏலத்தில் எடுத்ததில்லை. லக்னோ அணியில் ரிஷப் பண்ட், மார்க்ரம், பூரான் மற்றும் மிட்ஷெல் மார்ஷ் ஆகியோர் உள்ளதால் இன்னும் கேப்டன் யார் என முடிவு செய்யவில்லை என சஞ்சய் கோயங்கா சில வாரங்களுக்கு முன்பு பேசியிருந்தார்.

இந்நிலையில் இப்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதியக் கேப்டனாக ரிஷப் பண்ட்டை அவர் அறிவித்துள்ளார். தோனி மற்றும் கே எல் ராகுல் ஆகிய இருவரையும் கேப்டனாக நியமித்து பின்னர் அவர்களை அவமரியாதையாக நடத்தினார் கோயங்கா என்ற எதிர்மறையான பிம்பம் அவர் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

பும்ரா இல்லாத போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுகிறதா? சச்சின் சொல்வது என்ன?

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

டி20 போட்டியில் 650 விக்கெட்.. ஆப்கன் வீரர் ரஷித்கான் புதிய சாதனை

அடுத்த கட்டுரையில்
Show comments