Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘எவ்ளோ அடிச்சாலும் இந்த மைதானத்துக்குப் பத்தாது’… வெற்றிக்குப் பின் கோலி பகிர்ந்த தகவல்!

Advertiesment
விராட் கோலி

vinoth

, வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (07:18 IST)
நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த பரபரப்பான டி 20 ஆட்டத்தில் பெங்களூர் அணி போராடி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த RCB அணியின் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரும் மிகச்சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். கோலி 41 பந்துகளில் 70 ரன்களும், படிக்கல் 27 பந்துகளில் 50 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது.

206 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பதிலுக்கு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் 11 வீதம் ரன்கள் சேர்த்து வந்த அந்த அணி ஜெய்ஸ்வால் விக்கெட்டுக்குப் பிறகு தடுமாறத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் அந்த் அணியின் வெற்றி வாய்ப்புப் பிரகாசமாக இருந்த போதும் RCB பவுலர்களின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்குப் பின்னர் பேசிய விராட் கோலி “நாங்கள் விவாதித்தது போல ஒரு நல்ல ஸ்கோரை அடித்தோம். ஆனால் இந்த மைதானத்தில் இந்த ஸ்கோர் கூட போதுமானது அல்ல. இன்னும் 20 ரன்களாவது சேர்த்தால்தான் நாம் நிம்மதியாகப் பந்துவீச முடியும். எங்களது திட்டம் இதுதான். ஒரு பேட்ஸ்மேன் கடைசிவரைக் களத்தில் நின்று ஆடுவது. மற்றவர்கள் அதிரடியாக ஆடுவது.  இந்த மைதானத்தில் டாஸ் வெல்வதுதான் முக்கியமான விஷயம். இரண்டாவது இன்னிங்ஸின் போது ஈரப்பதம் எப்படி பேட்ஸ்மேன்களுக்கு உதவுகிறது என்பதைப் பார்க்கலாம். எங்கள் ஹோம் கிரவுண்ட்டில் எப்படி பேட் செய்யவேண்டும் என்பதை இப்போது நாங்கள் கற்றுக் கொண்டுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் பந்தில் 3 முறை சிக்சர்.. உலக சாதனை செய்த ஜெய்ஸ்வால்..!