பரபரப்பாக நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக்கொள்ள உள்ள நிலையில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசன் தொடங்கி 8 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள நிலையில் 2 போட்டிகளில் மட்டுமே வென்று 4 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. கடந்த 4 போட்டிகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. கடந்த போட்டியில் போராடி சூப்பர் ஓவர் வரை சென்று தோல்வியை தழுவியது.
நேரெதிராக ராயல் சேலஞ்சர்ஸ் அணியோ அனைத்து போட்டிகளிலும் கவனத்தை ஈர்க்கும் விதமாக சிறப்பாக விளையாடி வருகிறது. கடந்த 8 போட்டிகளில் 5ல் வெற்றிப்பெற்ற ஆர்சிபி அணி 10 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இவ்வளவு சிறப்பாக விளையாடும் ஆர்சிபி அணிக்கு அதன் சொந்த மைதானமே சூன்யமாக இருப்பது தொடர் கதையாக உள்ளது.
இந்த சீசனில் ஆர்சிபி 3 போட்டிகளில் தோற்றுள்ளது. இந்த 3 போட்டிகளுமே அதன் ஹோம் க்ரவுண்டான சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த போட்டிகள்தான். இந்நிலையில் இன்றைய போட்டியும் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளதால் செண்டிமெண்டாக ஒரு பயத்திலேயே ஆர்சிபி ரசிகர்கள் உள்ளனர். சின்னசாமி ஸ்டேடியத்தில் சாபத்தை தாண்டி ஆர்சிபி இன்றாவது வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
Edit by Prasanth.K