Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈ சாலா கப் நம்து.. டிவில்லியர்ஸ் & கெய்லைப் பெருமைப்படுத்திய கோலி!

vinoth
புதன், 4 ஜூன் 2025 (08:41 IST)
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற பெங்களூர் அணி, 18 ஆண்டுகால கனவு நனவானது. அதனால், அதன் வீரர்கள் உற்சாகமாக உள்ளனர். அந்த அணிக்காகத் தொடர்ந்து 18 ஆண்டுகள் விளையாடிய கோலி முதல் முறையாகக் கோப்பையைக் கையில் ஏந்தியுள்ளார்.

இந்தமுறை ஆர் சி பி அணி மிகச்சிறப்பாக ஆடிவந்த போதே, பலரும் கோலிக்காக ஆர் சி பி அணி இந்த கோப்பையை வெல்லவேண்டும் என ஆசையை வெளிப்படுத்தினர். ஏனென்றால் கோலி இந்த அணிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்துள்ளார். அவருக்கு இந்த ஐபிஎல் கோப்பை மிகவும் நியாயமானது என்பதே அனைவரின் கருத்தாகவும் இருந்தது.

இந்நிலையில் கோப்பையை வென்ற பின்னர் டிவில்லியர்ஸ் மற்றும் கெய்ல் ஆகியோரை அருகில் அழைத்துப் பேசிய கோலி “நாங்கள் மூவரும் எங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சகட்ட காலகட்டத்தை இந்த அணிக்காகக் கொடுத்துள்ளோம். அதனால் இந்த கோப்பைக்கு என்னைப் போலவே இவர்கள் இருவரும் முக்கியமானக் காரணகர்த்தாக்கள். இப்போது ’ஈசாலா கப் நம்து’” என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பைக்குத் தயார் நிலையில் பும்ரா?

மார்ச் மாதத்துக்குப் பிறகு எந்த போட்டியும் விளையாடவில்லை… ஆனாலும் ஒருநாள் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய ஹிட்மேன்!

ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டம்… ஜிதேஷ் ஷர்மாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

மகளிர் உலகக் கோப்பை போட்டிகள்… சின்னசாமி மைதானத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றம்?

ஆசியக் கோப்பை தொடரில் ஜெய்ஸ்வாலுக்கு இடம் இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments