Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த விராட் கோலி…!

vinoth
திங்கள், 14 ஏப்ரல் 2025 (08:00 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 173 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 75 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி அந்த இலக்கை ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 18 ஆவது ஓவரில் எட்டியது. இந்த போட்டியில் பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஃபில் சால்ட் மற்றும் கோலி ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

இந்த போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் விராட் கோலி டி 20 போட்டிகளில் 100 அரைசதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். விராட் கோலி ஐபிஎல் மற்றும் சர்வதேச டி 20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் இந்திய அணியுடன் இணையும் தோனி… இந்த முறையாவது பலன் கிடைக்குமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகல்

ஸ்ரீசாந்தை பளார் என அறைந்த ஹர்பஜன் சிங்! Unseen வீடியோவை வெளியிட்ட லலித் மோடி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தந்தை போலவே அதிரடியாக ஆடினாரா சேவாக் மகன்.. முதல் போட்டியில் எத்தனை ரன்கள்?

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து திடீரென விலகிய ரோஜர் பின்னி.. இடைக்கால தலைவர் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments