Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

Siva
ஞாயிறு, 13 ஏப்ரல் 2025 (16:13 IST)
ஐபிஎல் 2024 தொடரின் 28வது லீக் போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
 
இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார், முதலில் பந்துவீச முடிவு செய்தார். அணியின் வெற்றிப் பாதைக்கு திரும்பும் நோக்கத்தில், பெங்களூரு அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
 
மறுபக்கம், கடந்த போட்டியில் குஜராத் அணியிடம் தோல்வியடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ், தற்போது வனிந்து ஹசரங்காவைக் களமிறக்கி அணிக்கு மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இரு அணி வீரர்களின் விவரங்கள் இதோ:
 
ராஜஸ்தான் ராயல்ஸ்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரன் ஹெட்மயர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகீஷ் தீக்‌ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே.
 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
பிலிப் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, யாஷ் தயாள்.
 
இந்நிலையில் சற்றுமுன் ராயல் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் அவுட்டானார்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

மேக்ஸ்வெல்லின் செயலால் கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்…!

வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!

தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

சதமடித்து விட்டு பாக்கெட்டில் இருந்து பேப்பரை எடுத்துக் காட்டிய அபிஷேக் ஷர்மா.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments