Publish Date: Mon, 14 Apr 2025 (08:00 IST)
Updated Date: Mon, 14 Apr 2025 (08:32 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 173 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 75 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி அந்த இலக்கை ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 18 ஆவது ஓவரில் எட்டியது. இந்த போட்டியில் பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஃபில் சால்ட் மற்றும் கோலி ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர்.
இந்த போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் விராட் கோலி டி 20 போட்டிகளில் 100 அரைசதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். விராட் கோலி ஐபிஎல் மற்றும் சர்வதேச டி 20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.